சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்

ஈகரை தமிழ் களஞ்சியம் வழங்கும் ஸ்ரீ ராகவேந்திரர் மகிமை மற்றும் வரலாறு

ஸ்ரீ ராகவேந்திரர் மகிமை

Posted by சிவா மேல் ஒக்ரோபர் 14, 2008


ஸ்ரீ ராகவேந்திரர் ஆன்மிக விழிப்புணர்வுக்கு மக்களைப் பெருமளவில் ஈர்க்கத்
துவங்கிய காலம். அவருடைய தத்துவங்களைப் பெரும்பாலோர் ஏற்றுக்கொண்டனர் என்றாலும்,
அவருக்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை. ஆனால் எதிர்ப்புச் சம்பவங்கள் அனைத்துமே
அவருடைய மகிமையை மேம்படுத்தினவே அன்றி, எந்த வகையிலும் அவருக்குத் தலைகுனிவை
ஏற்படுத்திவிடவில்லை.

அவ்வாறு அவரையும் அவருடைய ஆன்மிக பிரசாரங்களையும் எதிர்த்த ஒரு குழுவினர், அவரை
அவமானப்படுத்த நினைத்தார்கள். தங்களுக்குள் ஒருவனை இறந்தவன் போல நடிக்கச்
சொன்னார்கள். அவனைத் தூக்கிக்கொண்டு ராகவேந்திரரிடம் வந்தார்கள். “ஐயா இவன்
எங்கள் தோழன், திடீரென்று காலமாகிவிட்டான். அவனுடைய மனைவியார்
துயருற்றிருக்கிறார்கள். இவனைப் பிழைக்க வையுங்கள்” என்று கெஞ்சிக்
கேட்டுக்கொண்டார்கள். ஆனால் ராகவேந்திரரோ, “இறந்தவன், அப்படியே இறந்தவனாகவே
இருக்கட்டுமே!” என்றார். அவ்வளவுதான், நடித்தவன் நிஜமாகவே காலமாகிவிட்டான்.
எதிர்ப்புக் குழுவினர் அதிர்ச்சியடைந்தார்கள். குறிப்பாக நடித்தவனின் மனைவி பெரியதாக
குரலெடுத்து அழ ஆரம்பித்தாள்.

அதைப் பார்த்த ராகவேந்திரர் மெல்ல சிரித்தார். நடிகனைப் பார்த்து,
‘எழுந்திரு’ என்றார்.

அவன் பளிச்சென்று எழுந்து உட்கார்ந்தான். எல்லோரும் ராகவேந்திரரைத் தொழுது
வணங்கினர்.

Posted in ஸ்ரீ ராகவேந்திரர் மகிமை | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »

ஸ்ரீ ராகவேந்திரர் நாம மகிமை

Posted by சிவா மேல் செப்ரெம்பர் 6, 2008


1. ராகவேந்திரர் நாமம் தன்னை நாளும் இங்கே ஜெபிக்கவே!
க்ஷேமம் உண்டாம்! ஜெயமும் உண்டாம்! ஜெகமெலாம் அருள்
தழைக்கவே!!

2. நாதன் நாமம் நாளும் பாட, நலமும் வளமும் கொழிக்கவே!
வேதம் போலது விழைந்து சொல்பவர், வெற்றிக்கும்
வழி வகுக்கவே!!

3. எடுத்த செயல்கள் அனைத்தும் இங்கே வெற்றி பெறவே நாடுவோம்!
எனையும் காக்கும் இறைவன் நாமம் இனிய தமிழில்
பாடுவோம்!!

4. நாளும் கோளும் நலமே செயவே நயந்து இங்கே நாடுவோம்!
நல்லதே செய நாடும் உள்ளம் நாளும் வளரப்
பாடுவோம்!!

5. துங்கபத்ரா நதியின் கரைதனில் தோன்றும் துணைவனை நாடுவோம்!
இங்கே இன்றே என் முன்னே வர இசைந்த குருவினைப்
பாடுவோம்!!

6. காலம் காலமாய் உலகைக் காக்கும் கருணைதனையே நாடுவோம்!
கற்றதும் மனம் களிப்பதும் தரும் கன்னித் தமிழில்
பாடுவோம்!!

7. ஞாலம் போற்றிடும் ஞானம் தந்திடும் நாதன் அருள் தனை நாடுவோம்!
நல்லதும் செய வல்லதீதென நாமும் அறிந்ததைப்
பாடுவோம்!!

8. மனிதராய் இங்கு பிறர்க்கு நலம் தரும் மனமதும் வேண்டி நாடுவோம்!
புனிதம் நாமம் புவனம் காக்கும்; போற்றிப் புகழ்ந்து
பாடுவோம்!!

9. இல்லம் காக்க ஏற்றதீதென எனக்கும் உரைத்திட்ட நாயகன்!
சொல்லும் செயலும் வேற்றுமையின்றி சுகம் தரும்
வழியுரைப்பவன்!!

10. மன இருள்தனை நீக்கி அருளும் மகிமைதனையே நாடுவோம்!
அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன் புகழ்தனைப்
பாடுவோம்!!

11. பொன்னும் மணியும் புவனம் போற்றும் புகழும் நமக்கே தருபவன்!
இன்னலகற்றி இன்பம் தருவான்; இணையடிதனை
நாடுவோம்!!

12. மண்ணதும் இங்கு மருந்தென்பார் அவர் மகிமைதனையே அறிந்தவர்!
உண்ணும் ஒவ்வோர் கணமதும் இங்கு உயர்ந்ததாகிட
வேண்டுவோம்!!

13. ஈசனிடத்தெம்மை இட்டுச் செல்லும் ஏணியாகும் நாமமே!
காசினியிற் கண்கண்ட தெய்வமாய் எமைக் காக்கவென்றே
வேண்டுவோம்!!

14. பஞ்சபூதம் இட்ட பணியும் செய்யுமவர் பக்தர் ஓர்
சொல்லும் சொல்லவே! தஞ்சமென்றவர்த் தாளைப்
பணிந்தவர் தகுதி ஈதெனச் சொல்லவோ!!

15. விஞ்சையர் குலம் விழைந்தெமைத் தொழ வேண்டும்
வரமதும் தருபவர்! நஞ்சும் அமுதாய் நலமதும்
தர நல்லருள் தரும் நாயகர்!!

16. பாடிப் பணிந்தவர் பக்தியுடன் சொலப் பரமனவன்
திரு நாமமே! கோடிப் புண்ணியம் குவலயத்திடை
கொண்டு தரக் கொண்டாடவே!

17. எட்டு நூறு ஆண்டுகள் இங்கு எம்மனோர்க்கருள் செய்பவன்!
அட்டமா சித்தி அனைத்தும் பெற்றிட அருள் புரிந்தெமை
அள்பவன்!!

18. அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன்
திருவடிதனைப் பணிந்திட! வரமும் விழைந்தது வணங்கித்
துதிப்பவர் வள்ளல் அருளால் பெறுவரே!!

19. குருவும் அவரென்று கொண்ட குலமதும் குவலயந்தன்னில்
தழைத்திட, திருவும் கல்விச் செல்வமும் தருவான்;
திருவடிதனைப் போற்றுவோம்!!

20. துன்பம் தவிர்த்து, தொடர்ந்து நாளும் துணையென
இங்கு வருபவன்!! தூயவன் அவன் பாதம் பணிந்து
தொடங்கும் செயலும் வெற்றியே!!

21. பிணியும் நோவும் பிறவும் விலக்குவார் (நம்மைப்) பெற்றதாயினும்
அன்புடன்; பணிவதே நாம் பயன் பெற நற்பாதையாகிட
விரும்புவோம்!!

22. மங்கலம் தரும்; மனமும் மகிழ்ந்திட மக்கட் செல்வமும்
தந்திடும்! எங்கள் குருவாம் ராகவேந்திரர் இணையடிதனைப்
போற்றுதும்!!

23. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட பொழிகுவான்
அவன் அருள்தனை எங்கள் இல்லம் என்றும்
சிறக்க இசைத்து மனமதும் மகிழுவோம்!!

Posted in ஸ்ரீ ராகவேந்திரர் நாம மகிமை | Leave a Comment »

குரு ராகவேந்திரர் 108 போற்றிகள்

Posted by சிவா மேல் செப்ரெம்பர் 6, 2008


ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி
ஓம் காமதேனுவே போற்றி
ஓம் கற்பகவிருட்சமே போற்றி
ஓம் சத்குருவே போற்றி
ஓம் சாந்தரூபமே போற்றி
ஓம் ஞான பீடமே போற்றி
ஓம் கருணைக் கடலே போற்றி
ஓம் ஜீவ ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி
ஓம் துளசி வடிவமே போற்றி

ஓம் தேவ தூதனே போற்றி
ஓம் பிரகலாதனே போற்றி
ஓம் பக்தப் பிரயனே போற்றி
ஓம் திவ்ய ரூபமே போற்றி
ஓம் தர்ம தேவனே போற்றி
ஓம் அலங்காரப் பிரியனே போற்றி
ஓம் அன்பின் உருவமே போற்றி
ஓம் காவியத் தலைவனே போற்றி
ஓம் அருட் பெரும் தெய்வமே போற்றி
ஓம் தேவ கோஷ பிரியனே போற்றி

ஓம் துவைத முனிவரே போற்றி
ஓம் கலைவாணிச் செல்வரே போற்றி
ஓம் மந்திராலய பிரபுவே போற்றி
ஓம் குருராஜரே போற்றி
ஓம் சுசீந்திரரின் சிஷ்யரே போற்றி
ஓம் மத்யமவத பீடமே போற்றி
ஓம் தீனதயாளனே போற்றி
ஓம் கருணா மூர்த்தியே போற்றி
ஓம் ஜெகத் குருவே போற்றி
ஓம் கலியுகக் கடவுளே போற்றி

ஓம் நல்லோரைக் காப்பவனே போற்றி
ஓம் தீயோரை அழிப்பவனே போற்றி
ஓம் ஸ்ரீ அனுமந்தப் பிரியரே போற்றி
ஓம் திம்மண்ணரின் தவப்புதல்வரே போற்றி
ஓம் வைராக்கிய தீட்சிதரே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிபக்தரே போற்றி
ஓம் தோஷங்களைத் தீர்ப்பவனே போற்றி
ஓம் பிரத்யட்ச தெய்வமே போற்றி
ஓம் அருட்பெரும் தெய்வமே போற்றி
ஓம் அறிவின் சுடரே போற்றி

ஓம் பண்டித மேதையே போற்றி
ஓம் தீய சக்தியை அழிப்பவனே போற்றி
ஓம் வெங்கட பட்டரே போற்றி
ஓம் வேதங்களை அறிந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ பிராமணப் பிரியரே போற்றி
ஓம் அஞ்ஞானத்தை அழிப்பவரே போற்றி
ஒம் மெஞ்ஞானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் வியாதிகளைத் தீர்ப்பவரே போற்றி
ஓம் அமானுஷ சக்தியே போற்றி
ஓம் மோட்சத்தை அருள்பவரே போற்றி

ஓம் ஆனந்த நிலைய்மே போற்றி
ஓம் கஷாயத்தை அணிந்தவரே போற்றி
ஓம் தூய்மை நிதியே போற்றி
ஓம் வரங்களை அளிப்பவரே போற்றி
ஓம் கண்னனின் தாசனே போற்றி
ஓம் சத்ய ஜோதியே போற்றி
ஓம் ஸ்ரீ ஜகத்குருவே போற்றி
ஓம் பாவங்களை அழிப்பவனே போற்றி
ஓம் மனிதகுல மாணிக்கமே போற்றி
ஓம் தெய்வாம்சப் பிறவியே போற்றி

ஓம் திருப்பாற்கடல் சந்திரனே போற்றி
ஓம் மகிமை தெய்வமே போற்றி
ஓம் அணையர் தீபமே போற்றி
ஓம் அகந்தையை அழிப்பவனே போற்றி
ஓம் யக்ஞ நாராயணரை வென்றவரே போற்றி
ஓம் பரிமளத்தை இயற்றியவரே போற்றி
ஓம் திராவிட நாட்டு தெய்வமே போற்றி
ஓம் முக்காலத்தை உணர்ந்தவரே போற்றி
ஓம் ஸ்ரீ மஞ்சாலத்தின் மாமுனிவரே போற்றி
ஓம் கஷ்டங்களைத் தீர்ப்பவரே போற்றி

ஓம் சுகங்களை அளிப்பவரே போற்றி
ஓம் வியாச பகவானரே போற்றி
ஓம் சங்கு கர்ணரே போற்றி
ஓம் பரமாத்மாவே போற்றி
ஓம் குருதேவரே போற்றி
ஓம் நன்மைகளைத் தருபவரே போற்றி
ஓம் தயாநிதியே போற்றி
ஓம் அருட்தவசீலரே போற்றி
ஓம் ஞான மூர்த்தியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி

ஓம் ஸ்ரீ புண்ணிய புருஷரே போற்றி
ஓம் அமுத கலசமே போற்றி
ஓம் அழகின் உருவமே போற்றி
ஓம் சந்தானத்தை அளிப்பவரே போற்றி
ஓம் சாஸ்திரங்கள் அறிந்தவரே போற்றி
ஓம் துளஸி மாலை அணிந்தவரே போற்றி
ஓம் ஜெபமாலை கொண்டவரே போற்றி
ஓம் மங்களம் தருபவரே போற்றி
ஓம் மன்மதனை ஜெயித்தவரே போற்றி
ஓம் காவல் தெய்வமே போற்றி

ஓம் நல் ஆயுளைத் தருபவரே போற்றி
ஓம் நல் ஐச்வர்யங்களை அளிப்பவரே போற்றி
ஓம் நல் அபயம் அளிப்பவரே போற்றி
ஓம் ஸ்ரீ உலகைக் காப்பவரே போற்றி
ஓம் காந்தக் கண்களே போற்றி
ஒம் யதிராஜரே போற்றி
ஓம் ஓம்கார ரூபமே போற்றி
ஓம் பிரம்ம ஞானியே போற்றி
ஒம் துங்கை நதியின் தூயவரே போற்றி
ஓம் இணையில்லா இறைவனே போற்றி

ஓம் விபீஷணரே போற்றி
ஓம் அனாத ரட்சகரே போற்றி
ஓம் சங்கீதப் பிரியரே போற்றி
ஓம் சுந்தர வதனரே போற்றி
ஓம் வியாச ராஜேந்திரரே போற்றி
ஓம் நரஹரி பிரியரே போற்றி
ஓம் தியாகமூர்த்தியே போற்றி
ஓம் வாணியின் வீணையே போற்றி

Posted in குரு ராகவேந்திரர் 108 போற்றிகள் | Leave a Comment »

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்

Posted by சிவா மேல் ஓகஸ்ட் 31, 2008


ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் (1595-671), 16ஆம் நூற்றான்டில் வாழ்ந்த இந்து மத மகான் ஆவார். இவர் வைணவ நெறியையும் மத்வர் நிலைநாட்டிய துவைத மதத்தையும் போதித்தவர் ஆவார். இவர் விஷ்ணு பக்தரான பிரஹலாதரின் அவதாரமாக கருதப்படுகிறார். இவர் தனது ஆயுள் காலத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்தியதல்லாமல் இன்றும் தனது பக்தர்களுக்கு ஆசியும் அருளும் புரிந்து கொண்டு இருக்கிறார். ராகவேந்திரர் ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள மந்திராலயம் என்ற இடத்தில் உள்ள இவரது பிருந்தாவனத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.

Posted in Uncategorized | Leave a Comment »

பிருந்தாவன பிரவேசம்

Posted by சிவா மேல் ஓகஸ்ட் 31, 2008


1671 ஆம் ஆண்டு ராகவேதிர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசத்திற்க்கு முன் தன் பக்தர்களுக்காக மனம் நேகிழவைக்கு ஒரு உரையை தந்தார். ஆவ்வுரையிலிருந்து சில பகுதிகள்:

  • சரியான வாழ்க்கை நடத்தையின்றி சரியான சிந்தனை வராது.
  • நல்ல மற்றும் தகுதிக்குரிய மக்களுக்கு செய்யப்படும் உதவி/தர்மம் கடவுளின் பூஜைக்கு நிகராகும்
  • சாஸ்த்திரத்தை பின்பற்றாமல் தங்களை கடவுள் என்று கூறிக்கொண்டு அதிசயங்களை செய்பவர்களிடமிருந்து விலகி இருங்கள். நானும் ஆசாரியாரும் நிறைய அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறோம். அவையெல்லாம் யோக சித்தியினானும் கடவுளின் அருளினாலும் எங்களால் செய்ய முடிந்தது. அவற்றில் எந்த பொய்யோ பித்தலாட்டமோ இல்லை. அவ்வதிசயங்கள் கடவுளின் மகிமையையும் அவர் அருளால் ஒருவர் எப்பேற்பட்ட சக்திகளை அடைய முடியும் என்று பறை சாற்றவுமே செய்யப்பட்டது. சரியான ஞானத்தை மிஞ்சிய எந்த அதிசயமோ அற்புதங்களோ கிடையாது சரியான ஞானம் இல்லாமல் செய்யப்படும் அற்புதங்கள் வெறும் சூனிய வித்தையே ஆகும். அவ்வித்தைகளை செய்பவருக்கோ அதை நம்புகிறவருக்கோ எந்த ஒரு நன்மையும் நேராது.
  • கடவுளின் மேல் நல்ல பக்தி இருத்தல் வேண்டும். இப்பக்தி குருட்டு நம்பிக்கையாக இருக்கக்கூடாது’. கடவுளின் மேலான்மையை முழு மனதோடு எற்றுக்கொள்ளுதல் பக்தி ஆகும். குருட்டு நம்பிக்கை உண்மையான பக்தி ஆகாது. அது வெரும் முட்டாள்த்தனமே ஆகும். நமக்கு கடவுள் மேல் மற்றும் இன்றி மற்ற இதர தேவதைகளிடமும் அவர்களின் தகுதிக்கேற்ப பக்தி இருத்தல் வேண்டும்.

இவ்வாறு உரையாற்றிய பிறகு ராகவேந்திரர் பிரணவ மந்திரத்தை ஜபித்துக்கொண்டு ஆழ்ந்த தியானத்தில் இறங்கினார். ஒரு தருவாயில் அவர் கையில் இருந்த ஜபமாலை நின்றது. அந்த அறிகுறியைப் புரிந்துகொண்ட அவர் சீடர்கள் அவரை சுற்றி பிருந்தாவன சுவர் எழுப்பத் தொடங்கினார்கள்.

Posted in Uncategorized | குறிச்சொல்லிடப்பட்டது: | Leave a Comment »